கார் ஓட்ட உரிமை கேட்கும் சவுதி பெண்கள்.
உலகிலேயே பெண்கள் வாகங்களை ஓட்டுவதற்குத் தடை நிலவும் ஒரே நாடு அவுதி அரேபியா. இந்தத் தடையை எதிர்த்து 60 க்கும் மேற்பட்ட பெண் வாகன ஓட்டிகள் சமீபத்தில் ட்தொடர்ந்த போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை சாலைகளில் வண்டியை ஓட்டிச்
செல்வதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி கேள்விகளை எழுப்பினாலும், பிற வாகன ஓட்டிகள் பென் வாகன ஓட்டுனர்களை உற்சாகப்படுத்தியதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர்.
" எங்களைக் கடந்து சென்ற பல கார்களின் ஓட்டுனர்கள் எங்களைக் கண்டுகொள்ளவே யில்லை. ஒரே ஒரு ஆண் ஓட்டுனர் மட்டும் எங்கள் காரை நிறுத்தச் சொல்லி ஹார்ன் எழுப்பினார். நான் பயந்தேன். ஆனால், அவர் எனக்கு கைகாட்டி எங்கள் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார், சவூதி அரேபியர்கள் எங்களை அங்கீகரிக்கத் தயாராகவே உள்ளனர். அச்சம் ஒன்றுதான் இங்குள்ள பெண்களைத் தடுக்கிறது" என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி ராணா.
யூ டியூபில் வெளியான காரோட்டும் சவுதி அரேபிய பெண்ணின் படத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் ஆதரவும் குவிந்தவண்ணம் இருக்கிறது.
-- ஷங்கர். பெண் இன்று. உலகம் இவள் வசம்.
--' தி இந்து' நாளிதழ். சனி, நவம்பர் 2, 2013.

No comments:
Post a Comment