Tuesday, January 28, 2014

அறிவோம்! தெளிவோம் !

பாக்கெட் பாலை அபிஷேகத்திற்குப் பயன்படுத்தலாமா?
     காஞ்சி மகாபெரியவர் ஒருமுறை வடதேச யாத்திரை சென்றிருந்தார்.  அவர் தினமும் வழிபடும் சந்திர மவுளீஸ்வரர் பூஜைக்கு ஒரு வட இந்தியர் நிறைய பால் வாங்கிக் கொடுத்தார்.  பால் அபிஷேகம் செய்யத் துவங்கும் நேரம் பெரியவர் சுற்றும்முற்றும் பார்த்தார்.  ஒரு ஓரமாக முதியர் ஒருவர் சிறிய கூஜாவை வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.  பெரியவர், அம் முதியவரை அழைத்து கூஜாவை வாங்கித் திறந்து பார்த்தார்.  அதில் பால் இருந்தது.  அது மட்டும்  சந்திர மவுளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  பூஜைகள் முடிந்து பிரசாதம் பெறும் போது,  தான் கொண்டு வந்த பாலை அபிஷேகத்திற்கு சேர்த்துக் கொள்ளாததைப்பற்றி அந்த வடைந்தியர் வருத்தத்துடன் கேட்டார்.
    " இவ்வளவு பால் எப்படிக் கறக்கப்பட்டது? " என்று பெரியவர் வினவினார்.
    " மிஷின் மூலமாக " என்றார் வடைந்தியர்.
    " கன்றுக்குட்டிக்கு ஊட்டி, அதன் பிறகு கறக்கப்படும் பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது.  நீர் கொண்டு வந்த பாலின் தரத்தை அறிந்துதான் அதை உபயோகிக்கவில்லை.  சிறிதளவு செய்தாலும், கன்று ஊட்டி கறந்த பசும் பால்தான் உயர்ந்தது" என்று கூறினார்.
     மிஷினில் கறக்கப்படும் பசும் பாலுக்கே இந்த கதி என்றால், பாக்கெட் பாலைப் பற்ரி நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்.
-- ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்,  மயிலாடுதுறை.
-- தினமலர். பக்திமலர். நவம்பர் 7, 2013

No comments: