நீங்கள் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம், உங்கள் கைபேசிக்கு மின்னூட்டம் ( ரீசார்ஜ் ) செய்யமுடிந்தால் எப்படியிருக்கும்? குழப்பமாக இருக்கிறதா? பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் ரோபாடிக்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நுண்ணுயிர் ஆற்றல் கலன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மின்கலத்துக்குள் சிறுநீர் செல்லும்போது நுண்ணுயிரிகள் அவற்றைச் சிதைக்கின்றன. இந்த நடைமுறையின்போது எலக்ட்ரோடுகள் உற்பத்திச் செய்யப்படுகிறன. அது மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்தக் கலன் மூலம் 2 எஸ்.எம்.எஸ்., ஒரு அழைப்பைச் செய்யத் தேவையான மின்சாரம் கிடைத்ததாம். மின்னேற்றியை மேம்படுத்த இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது முயன்றுவருகிறார்கள்.
-- உயிர் மூச்சு . பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய் அக்டோபர் 22 ,2013. .
-- உயிர் மூச்சு . பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய் அக்டோபர் 22 ,2013. .
No comments:
Post a Comment