Friday, March 14, 2014

' குன்றிமணி '

' குன்றிமணி ' அளவாவது தங்கம் இருக்கிறதா?
      குன்றி என்னும் செடியின் கொத்துக்கொத்தான விதைகள்தான் குன்றிமணி.  இந்த விதைகள் முழுவதும் சிவப்பாகவோ,  பாதி சிவப்பாகவும் பாதி கறுப்பாகவோ இருக்கும்.  'குன்றி '  என்று இந்தச் செடியைச் சொல்லும் வழக்கம் இன்று மறைந்துவிட்டது.  செடியையும் அதன் விதைகளையும் குன்றிமணி என்றுதான் தற்காலத்தில்  அழைக்கிறார்கள்.
தங்கத்தை நிறுக்க குன்றிமணி என்ற அளவு முன்பு பயன்படுத்தப்பட்டது என்பது இப்போது எவ்வளவு பேருக்குத் தெரியும்?  குன்றிமணி என்பது 33.33 மில்லி கிராம் அளவு.  சர்வதேச அளவை முறைகளின் ஆதிக்கத்தால்,  இது போன்ற தமிழ் அளவை முறைகள் வழக்கொழிந்துவிட்டன.   இருந்தாலும், கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் ' வீட்டுல ஒரு முன்றிமணி அளவுகூடத் தங்கம் இல்லைன்னா எப்படி? ' என்று சொல்வதுண்டு.  அந்த வகையில் குன்றிமணி என்ற நிறுத்தல் அளவை இன்னும் உயிரைப் பீடித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  நம் வீடுகளில் குன்றிமணி அளவாவது தங்கம் இருக்கும்.  ஆனால், குன்றிமனி என்ற அளவு இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.
     பொன்னை நிறுப்பது தொடர்பான வேறு சில சொற்கள் :
நெல்
( நெல்லெடை ) .............. 8.3 மி.கி.
மஞ்சாடி .......................... 66.67  மி.கி.
பணம் ( பனவெடை ) .....133.33  மி.கி.
வராகன் ........................... 1.067 கிராம்
அழஞ்சு ............................ 5.33 கிராம்.
கஃக ................................. 10.4 கிராம்.
பலம் ................................ 41.6 கிராம்.
-- சாத்தனார்.  அறிவோம் நம் மொழியை. கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' .நாளிதழ் . வியாழன்  அக்டோபர் 24  ,2013.  

No comments: