ஒவ்வொரு நிமிடமும் ஒரு வளர்ந்த மனிதர் சராசரியாக ஏழு லிட்டர் காற்றை சுவாசிது, வெளியே விடுகிறார். நமது நுரையீரல் நான்கு முதல் ஆறு லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
-- ஆதி வள்ளியப்பன், பொது அறிவு. வெற்றிக்கொடி. அறிவு உயர்வு தரும் . சிறப்புப் பகுதி.
-- -' தி இந்து ' நாளிதழ் ..திங்கள், அக்டோபர் 28, 2013.
நம்மில் பலரும் நம்புவது போல நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பெருமள் வு காடுகளில் இருந்து வருவதில்லை. கடல்களில் இருந்தே வருகின்றன. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.
ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் ( ஓசோன் படலம் ) சூரியனிலிருந்து வெளிப்பட்டு நமக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் புறஊதாக் கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது.-- ஆதி வள்ளியப்பன், பொது அறிவு. வெற்றிக்கொடி. அறிவு உயர்வு தரும் . சிறப்புப் பகுதி.
-- -' தி இந்து ' நாளிதழ் ..திங்கள், அக்டோபர் 28, 2013.
No comments:
Post a Comment