* பக்கோடா செய்ய பெரும்பாலும் கடலைமாவுதான் உபயொகிக்கிறோம். அவசரத்துக்கு சரி. அதையே கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து
பிறகு மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து செய்தால் பக்கோடா மொரமொரப்பாக அதிக
ருசியுடன் இருக்கும்.
* கோதுமை ரவை உப்புமா என்றாலே யாருக்கும் பிடிக்கவில்லை எங்கள் வீட்டில். ரவையை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிளகய், பெருங்காயம், வெங்காயம்
போட்டு அரைத்து தோசை வார்த்தேன். எல்லோருமே சூப்பர் என்றார்கள். மிளகாய் சட்னி இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
* மதியம் வடித்த சாதம் மீந்து விட்டால், அதை ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் காலை பொங்கலாக மாற்றலாம். பாசிப்பருப்பு வேகவைத்து மிளகு, சீரகம், மிளகாய், இஞ்சி,
முந்திரியை வறுத்து, தேவையான உப்பு, மஞ்சள் தூளுடன் சாதத்தில் கலந்து இரண்டு விசில் வந்தவுடன் நெய் கலந்தால், மனக்கும் ஈஸி பொங்கல் தயார். சாம்பார்
போதும்.
* பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ் வகைகள் செய்யும்போது, அடிபிடிக்காமல் இருக்க அடியில் பிரியாணி இலைகளை பரப்பி தம் போடுங்கள்.
-- அவள் விகடன். ஏப்ரல் 11 , 2003.

1 comment:
நன்றி...
Post a Comment