குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?
பூமியில் மனிதர்கள் ஒருக்கால் அழிந்துவிட்டால், மீண்டும் மனிதக்குரங்குகளில் இருந்து மனிதன் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா? இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பரவலாக நம்பப்படுவது, கூறப்படுவதைப் போல நாம் மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை.
நமக்கும், மனிதக்குரங்குகளுக்கும் பொதுவான ஒரு மூதாதை 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அந்த பொது மூதாதையை Pan Prior என்று அழைக்கிறார்கள் அல்லது மனிதன், குரங்கு பொது மூதாதை என்கிறார்கள். அறிவியல்ரீதியில் நாம் இன்னமும் மனிதர்களாக வகைப்படுத்தப்படவில்லை. நாம் மனிதக்குரங்குகள்தான். அதாவது, சமூகத்தில் வாழும் மனிதக்குரங்குகள்.
அதேநேரம் நமது பொது மூதாதை இப்போது வாழ்கிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட, பரிணாம வளர்ச்சி என்பது தொடர்பற்ற மரபணு கலப்பு ( Gene mutation), சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் ( Envionmental pressures ) உருவாகும் இயற்கைத் தேர்வு ( Natural selection ) ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிகழ முடியும். இவற்றை வைத்துப் பார்த்தால், மீன்டும் மனித இனம் தான் கடந்து வந்த பாதையைத் தொடுவதற்கு மிகக் குறைந்தபட்ச வாய்ப்புகள்கூட இல்லை.
-- அறிவியல் அறிவோம்.
-- ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய் அக்டோபர் 22 ,2013.

No comments:
Post a Comment