( சிறப்பு )
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மறைவு . ( 2-2-1915 -- 20-3-2014 )
எவ்வளவு பெரிய புத்திஜீவியாக இருந்தாலும் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கும்போது பயம் வந்துவிடும். ஆனால், எதைப் பற்றியுமே கவலைப்படாத குஷ்வந்த், 30 வயதைத் தாண்டாத இளைஞராக இருந்தபோதே ( 1943-ல்) தன் கல்லறை வாக்கியம் எப்படி இருக்கும் என்று எழுதி வெளியிட்டார். அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இது :
'கடவுளையோ, மனிதனையோ யாரையும் விட்டு வைக்காதவன் இங்கே உறங்குகிறான். யாரும் இவனுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம். ஏனென்றால், இவன் ஒரு பொறுக்கி. அசிங்கமாக எழுதுவது இவனுக்கு ஒரு விளையாட்டு. நல்லவேளை செத்துவிட்டான்... ரவுடிக்குப் பிறந்த ரவுடி!'
ஆனால், குஷ்வந்த் விரும்பியபடி அவர் புதைக்கப்படவில்லை. மண்ணில் இருந்து வந்த நாம் மண்ணுக்கே போவதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார். பல நிர்வாகக் காரணங்களால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. உயிரோடு இருந்திருந்தால் இதையும் கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
குஷ்வந்த் சிங் பற்றி சுருக்கமாகச் சொன்னால், அவரைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோமோ, அதேபோல் அவரைப் படித்த பிறகும் இருக்க முடியாது !
-- சாரு நிவேதிதா. எழுத்தாளர்.
-- ஆனந்த விகடன். 02-04-2014.

No comments:
Post a Comment