Saturday, March 22, 2014

தெரிந்து கொள்வோம்!

*  விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் இருக்கும் கதவுகள், தானாகத் திறந்து மூடுவதைப் பார்த்திருப்பீர்கள்.  இதற்கு உதவியாக இருப்பது, ' ஸெலினியம் ' என்ற  தனிமம்.  இது, எளிதில் மின்சாரத்தைக் கடத்தும்.  என்றாலும், வெளிச்சத்தில் மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும் குணம்கொண்டது.  தானியங்கிக் கதவுகளில் ஸெலினியம்
   தகடும், அதில் ஒளிபடும் அமைப்பும் இருக்கும்.   நாம் கதவின் அருகே சென்றதும் ஒளி தடைபடுவதால், கதவு தானாகத் திறக்கிறது.

*  இசைக்கு நிகராக இயற்கையாகவே இசை எழுப்பும் பறவைகள் எத்தனையோ உண்டு.  அந்தப் பறவைகளின் ஒலி மனிதனின் உயர் ரத்த அழுத்தத்தைக்கூடச் சரிசெய்யும்  வல்லமை பெற்றது.

*  சாதாரணமாகக் காலை வேளைகளில் மரஞ்செடி கொடிகளுக்கு மத்தியில் அமர்ந்து பறவைகளை ரசிக்கும்போது அதற்கு இணையான இன்பம் ஏதுமில்லை.  அதனாலேயே  இயற்கை ரசிகரான பாரதியும் உணவுக்கு வைத்திருந்த குறைந்த அளவு அரிசியைக்கூடப் பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு பசியாய் இருந்ததாக கூறுவார்கள்.

No comments: