வியக்கவைக்கும் வைக்கோல் குக்கர் !
" வைக்கோல் மூலம் வீட்டில் அமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம் "என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சிந்து.
சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையாக வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில் நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம் குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும் இதனால், எரிபொருள் மிச்சம்.
சாதம் மட்டுமல்ல, பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.
இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும். ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறபோது, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது... இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றிச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்.
-- மா.அ. மோகன் பிரபாகரன். சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.

No comments:
Post a Comment