Wednesday, March 5, 2014

நோய் பரவல்.

நோய் பரவலைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்.
ஒரே நாளில் தெரிந்துகொள்ளலாம்.  இந்தியாவில் முதல்முறை.
     பொதுவாக எந்த ஊரில் என்ன நோய் தாக்குகிறது என்பதை அறிய, இப்போதுள்ள நடைமுறைகளின் படி சுமார் 6 மாத காலம் ஆகும்.  அதற்குப் பிறகே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஆனால் அதற்குள்ளாகப் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  இவற்றைக் கருத்தில் கொண்டு
' கணினி தொழில்நுட்ப முன் கணிப்பு மேலாண்மை ' எனும் பெயருள்ள மென்பொருள் ஒன்றை சென்னை கிங்ஸ் நோய்த் தடுப்பு நிறுவனத்திடம்
வழங்கப்பட்டது.
     இன்று நாட்டில் எந்த மூலையில் என்ன நோய் தாக்குகிறது என்பது உடனடியாகத் தெரியாது.  அது மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கு முன்னால் அதன் பாதிப்பை முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களூக்குச் சிகிச்சையளிக்க வேண்டும்.  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     கால விரயத்தைத் தடுக்க இந்த மென்பொருளில் சில படிவங்களை மின்னணு முறையில் நிரப்பும்படி வடிவமைத்துள்ளோம்.  தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள களப் பணியாளர்களுக்கு இந்த மென்பொருளை சாதாரண செல்போனில் பதிவு செய்து கொடுத்துவிட்டால் குறுஞ்செய்தி மூலமாக அவர்கள் அந்தப் படிவங்களை நிரப்பி தலைமைக் கணினிக்கு அனுப்பிவிட்டால் போதும்.
     ஆரம்ப சுகாதர நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிகப்பட்ட ஒரு வரைபடமும் இந்த மென்பொருளில் உண்டு. இதில் நோய் பரவல் உள்ள இடங்களை பச்சை, நீலம், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் காட்டும்.  அதனால் எந்த இடத்தில் மிகக் குறைவாக, ஓரளவு அதிகமாக மற்றும் மிக அதிகமாக நோய்பரவல் உள்ளது என்பதை ஒரே நாளில் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசு வீண் செலவுகளைத் தவிர்க்க முடியும்.
     இந்த மென்பொருள் மூலம் சுமார் 250 நோய்ப் பரவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.  ஒவ்வொரு நாளும் என்ன நோய் எந்த இடங்களில் பரவியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று அவர்களின் வழிகாட்டுதல்படி இது நடைமூறைப்படுத்தப்படும்.
-- தேசம்.
--   ' தி இந்து ' . நாளிதழ் . சனி, அக்டோபர் 19 ,2013.    . 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலை பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...