Saturday, March 22, 2014

கூகுளில் தேட...

 ( சிறப்பு )
எளிய முறைகள்.
     குறிப்பிட்ட உங்கள் குறிச்சொற்களுக்கு ஏற்ற பி.டி.எப். கோப்பை மட்டும் தேட நினைக்கிறீர்கள் என்றால், அந்தக் குறிச்சொல்லுடன் File Type: PDF என டைப் செய்தால் போதுமானது.  அதாவது indian Election Result என்ற குறிச்சொல்லில் தேட நினைக்கிறீர்கள் என்றால்  indian Election Result File Type: PDF என டைப் செய்தால் பி.டி.எப். கோப்புகளை மட்டும் தேடல் முடிவுகள் காட்டும்.  ps, doc, ppt, xls, rtf ஆகிய கோப்புகளையும் இதுபோலத் தேடிக் கண்டடையலாம்.
     கூகுள் தேடுதலை ஏற்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும் வருவதைத் தவிர்க்க கூகுள் பக்கத்தில் Show Search Tools என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  அதில் சில தெரிவுகள் ( Options ) இருக்கும்.  அதில் Not Yet Visited என்பதை கிளிக் செய்தால் போதும் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் நீக்கிப் புதிய தேடல் முடிவுகளை கூகுள் நமக்கு வழங்கும்.
     கல்வி தொடர்பாக தேடலுக்கு Site: edu எனக் குறிச்சொல் இடலாம்.  இதனால் தேடுதல் சுலபமாகும்.  கல்வியிலேயே கணிதத் தேர்வு குறித்து தேடவேண்டியிருப்பின் site: edu maths exams என்ற சொற்களை போட்டுத் தேடினால் எளிதில் தீர்வு கிடைக்கும்.
     நமக்குத் தேவையான தகவல்களை விரிவாகத் தேட நமக்குத் தெரிந்த இணைய தளத்தோடு தொடர்புடைய வேறு இணையதளங்களில் தகவல்களை தேட வேண்டுமெனில் related என்ற சொல்லுடன் நாமறிந்த இணையதள முகவரியைச் சேர்த்து டைப் செய்து தேடலாம்.  எடுத்துக்காட்டாக related www.hindu.com என்று தேடினால் இந்து இணையதளத்தின் அனைத்துப் பக்கங்களையும் அது போக இந்து என்ற பெயரில் உள்ள இணையதளங்களையும் கூகுள் கொண்டுவந்து சேர்க்கும்.
-- வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, மார்ச் 22,2014.

No comments: