மோனோ ரயில், மெட்ரோ ரயில் ஆகிய இரண்டு வகை ரயில்களுமே உலகில் மிகக் குறைவான நகரங்களில்தான் இருக்கின்றன. இவை இரண்டுமே திறமையான, வேகமான போக்குவரத்துகள் என்றாலும் பலவிதங்களில் வேறுபட்டவை.
மோனோ ரயில் என்பது ஒரே தண்டவாளத்தில் ஓடுவது. மெட்ரோ ரயில் என்பது, வழக்கமான ரயிகளைப்போல, இணை கோடுகளாக அமைந்த இரண்டு தண்டவாளங்களில் ஓடும். மோனோ ரயிலுக்கான அகலம் குறைவானது. 1950 களிலேயே இது அறிமுகமாகிவிட்டது என்றாலும், அவற்றின் மிக அதிகமான உருவாக்க கட்டணம் காரணமாக அவை வேகமாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஜெர்மனியில் முதலில் உருவானது என்றாலும், ஜப்பானில்தான் மோனோ ரயிலை பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
மோனோ ரயில் எப்போதும் உயரத்திலுள்ள தண்டவாளத்தில் ஓடும். மெட்ரோ ரயில் நிலத்துக்குக் கீழே, நிலத்தில் , நிலத்துக்கு மேலே என்று அனைத்து தடங்களிலும் செல்லும். ஷாங்காய், லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில்கள் சரளமாக ஓடுகின்றன. நம் நாட்டில் கொல்கத்தாவில் அறிமுகமான இது டெல்லியிலும், சமீபத்தில் பெங்களூருவின் ஒரு பகுதியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. போதுவாக மோனோ ரயில் மெதுவாகத்தான பயணம் செய்யும்.
-- குட்டீஸ் கேள்வி - பதில்.
-- தினமலர். சிறுவர்மலர். மார்ச் 22, 2013.