கப்பல் என்றாலே பிரமாண்டம்தான். அதிலும் உலக மகா பிரமாண்ட கப்பல் எது தெரியுமா? ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் . ஃபின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2009 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பல் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆச்சரியம் தருகின்றன.
* எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்.
* கப்பலுக்குள் 150 மைல் நீளத்திற்கு பைப்புகளை பயன்படுத்தியுள்ளனர்.
* கப்பலில் பயன்படுத்தப்பட்ட மின் ஒயர்களின் நீளம் 3 ஆயிரத்து 300 மைல்.
* ஒரே சமயத்தில் இந்தக் கப்பலில் 6,300 பேர் பயணிக்க முடியும்.
* பதினாறு மாடிகள் கொண்ட இதில் 2 ஆயிரத்து 700 அறைகள் உள்ளன.
* கப்பலுக்குள் 7 சிறிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. திறந்த வெளி அரங்கமும் உண்டு.
* 11 விடுதிகளும் 7 நீச்சல் குளங்களூம் உள்ளன.
* குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், கைப்பந்து, கோல்ஃப் மைதானங்களூம் இருக்கின்றன. இது கப்பலா இல்லை கடலான்ணு ஆச்சரியமா
இருக்குதானே!?
-- கார்த்தி. மாயாபஜார். குழந்தைகளின் குதூகல் உலகம். சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து 'நாளிதழ் புதன்,. அக்டோபர் 9, 2013.

No comments:
Post a Comment