18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.பல்குச்சி பயன்படுத்திய மனிதர்கள். ஜூரிச் பேராசிரியர் தகவல்.
ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களை இணைக்கும் நாடான ஜார்ஜியாவில் டுமான்சி எனும் பகுதி உள்ளது. இது தொல்லியல் படிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
பல லட்சம் ஆண்டுகளூக்குமுன் மனிதன் இங்கு வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆப்பிரிக்காவுக்கு வெளியே கிடைத்துள்ள மிகப் பழமையான மனித படிமங்கள் இங்குதான் கிடைத்துள்ளது. இவற்றில், மனித மண்டையோட்டின் கீழ்த்தாடை எலும்புகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அப்போதைய மனிதர்கள் பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பல்குச்சியைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் ஈறு நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கிடைத்துள்ள கீழ்த்தாடைகள் எந்த வயதினருக்கு உரியவை என்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. கீழ்த்தாடைகள் பல்வேறு அளவில் உள்ளன. பற்களில் ஏதோ அணிந்திருந்தனர்.
இளம் வயதுடைய ஒருவர் பல்குச்சி பயன்படுத்தியது, அவரின் பற்கள் விழுந்து விடாமல் முழுதாக உள்ளது, பல்லுக்கும் ஈறுக்கும் இடையே ஒரு துளை உள்ளதும், அத்துளை வழியாக ஒரு பல்குச்சியைச் செருக முடியும் என்பதையும் தெரிவித்தனர்.
டுமான்ஸியில் கண்டறியப்பட்ட தொல்படிமங்களின் மூலம் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் இடம் பெயர்ந்திருக்கக் கூடும் எனவும், அவர்கள் குட்டையாக, மிக நீண்ட கைகளும், சிறிய மூளையையும் கொண்டவர்களாக இருந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
-- பி.டி.ஐ. சர்வதேசம் .
-- ' தி இந்து ' நாளிதழ், செவ்வாய் அக்டோபர் 15, 2013.

No comments:
Post a Comment