சாஸ்திரங்கள் கடவுள் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தியை 9 வகைகளாகப் வகைப்படுத்தியுள்ளன. அவை:
1. சரவணம்: குருமார்களிடமும், சமய சான்றோர்களிடமும் நாம் இறைவனின் அருமைப் பெருமைகளைப்பற்றி கேட்டு அறிந்து இறைவனிடம் பக்தி
கொள்வது சரவணம் ஆகும். -- சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து, பாகவதம் கேட்டு தன் பாவங்களில் இருந்து விடுபட்டான்.
2. கீர்த்தனம்: இறைவனின் புகழ்பாடும் பாடல்கள் கீர்த்தனங்கள் ஆகும். இதனை பஜனை செய்து, இறைவனை வழிபடுவது கீர்த்தனம். -- சுக முனி பாடிய
பாகவதக் கதையால் சுகம் அடைந்தவர் கேட்டவர் எல்லாம்.
3. ஸ்மரணம்: ' இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் ' என்று மாணிக்கவாசகரின் எண்ணப்படி, முழு நம்பிக்கையுடன் எப்போதும் இறைவனை பற்றி
நினைத்துருகுவது ஸ்மரணம். -- எத்தனையோ துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பிரகலாதன் தன் ஹரியை மறக்காமல் நினைத்துக்கொண்டிருந்தான்!
4. பாதஸேவனம் : இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது, நல்ல உள்ளத்துடன் இறைவனை சேவை செய்தல் பாதஸேவனமாகும். -- இந்தப்
பாக்கியத்தை பெற்றவள் லட்சுமி தேவி.
5. அர்ச்சனை : உள்ளன்புடன் நாளும் பொழுதும் மலர்களைக்கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வது அர்ச்சனை. -- பிருது மகாராஜா என்பவர்,
இறைவனுக்கு இடைவிடாது அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி பெற்றவர். இறை அருள் பெற்றவர்.
6. வந்தனம் : இந்த உடல் இறைவன் கொடுத்தது. எனவே, இந்த உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து,
சாஷ்டாங்கமாக இறைவனை வணங்கி எழுதலுக்குப் பெயர் வந்தனம். -- கண்ணனை தினமும் வணங்கி, கண்ணனைக் கண் கூடாகக் கண்டவர் பக்த
அக்ரூரர்.
7. தஸ்யம் : எப்போதும் இறைவனுக்கு நம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் கஸ்யம் ஆகும். -- இதற்கு சிறந்த உதாரணம் அனுமன்.
8. ஸக்யம் : ஒரு பக்தன், இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது. -- முப்பொழுதும் கண்ணனோடு
இருந்து, உண்டு, உறங்கி, பேசிப் பழகி, அன்பு, நட்பு, பக்தி செய்த அர்ஜுனன் கொண்ட பக்தி ஸக்யம்.
9. ஆத்ம நிவேதனம் : இந்த ஆத்மா அவனுடையது. அது அவனுக்கு உரிமையுடையது என நினைத்து, இறைவனுக்கு தன்னையே ஒப்புக்கொடுப்பது
ஆதம நிவேதனம் ஆகும். -- இதற்கு சிறந்த உதாரணம் அரசன் மகாபலி.
-- தேவராஜன்.
-- தினமலர். வாரமலர். 26- 5-2013.

No comments:
Post a Comment