Wednesday, May 14, 2014

ஐசான் வால்நட்சத்திரம்.

பூமியின் மீது ஐசான் வால்நட்சத்திரம்.மோதுமா?
     சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள ' ஊர்ட் ' எனும் மேகப்பகுதியில் இருந்து வரும் ஒரு புதிய வால்நட்சத்திரம்தான் ஐசான் வால்நட்சத்திரம்.  மேலும், பவுர்ணமி நிலவின் பிரகாசத்தைவிட மிக அதிக பிரகாசமாக இந்த  வால்நட்சத்திரம் இருக்கும் என்று நம்பப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
     கடந்த 200 ஆண்டுகளாக நாம் பார்த்த வால்நட்சத்திரங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும்.  ஆனால், முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இந்த ஐசான் வால்நட்சத்திரம்.  மேலும், ' ஊர்ட் ' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.
     அதனால், அது சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும்.  அதன் மூலம் உலகம்தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.
       இந்த  வால்நட்சத்திரம் பூமியில் மோத வாய்ப்பு இல்லை.  வரும் நவம்பர் 2013, 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை இந்த  வால்நட்சத்திரம் வானில் புலப்படும்.  அப்போது தொலைநோக்கி, பைனாகுலர் போன்றவற்றின் மூலம் இதை நாம் வெறும் கண்ணால் காண முடியும்.
-- ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013.

No comments: