மனிதரைக் கொட்டியவுடன் தேனீ ஏன் இறந்து போகிறது ?
தேனீக்கள் கூர்முனையுடன் கூடிய கொடுக்குகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் தங்களுக்குத் தொந்திரவாக இருக்கும் மற்ற தேனீக்களையும் பூச்சிகளியயும் கொட்ட முடியும். அதேநேரம், தன் கொடுக்குகள் மூலம் ஒரு பாலூட்டியைத் தேனீ கொட்டும்போது, பாலூட்டிகளுக்கு உள்ள கடினமான தோல் காரணமாக, தேனீயின் கொடுக்குகள் தோலில் மாட்டிக்கொள்கின்றன. அதிலிருந்து விடுபடுவதற்குத் தேனீ முயற்சிக்கும்போது, அதன் அடிவயிற்றின் ஒரு பகுதி பிய்ந்து விடுகிறது. இதனால் அடுத்த சில நிமிடங்களில், அது இறந்துபோகிறது. இப்படி இறப்பவை வேலைக்காரத் தேனீக்கள்தான். அவை பெண்ணும்கூட. ராணி தேனீக்கள், மற்ற தேனீ வகைகள், குளவிகள் போன்றவை மென்மையான கொடுக்குகளையே கொண்டுள்ளன. இந்த மென்மையான கொடுக்குகள் மூலம், பாலூட்டிகள் தோலிலும்கூட அவை பல முறை கொட்ட முடிகிறது. இந்த வசதி வேலைக்கார பெண் தேனீக்களுக்கு இல்லை. பஸ்மாசுரன் போல, கொட்டியவுடன் அவை இறந்து போகின்றன.
-- உயிர் மூச்சு. பசுமையின் சுவாசம் . சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ், செவ்வாய் அக்டோபர் 15, 2013.

No comments:
Post a Comment