வியாழனை விட பெரிய கோள் கண்டுபிடிப்பு
வியாழன் கிரகத்தை விட பெரிய அதே சமயம் மிக இளவயதுடைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள இந்தக் கோள் பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
பிஎஸ்ஓஜே 318.5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கிரகம் 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம் குறிப்பிட்ட எந்த நட்சத்திர மண்டலத்தையும் சார்ந்தது இல்லை.
இது தொடர்பாக ஹவாய் பல்கலைக்கழக வானியல் பிரிவு தலைவர் மைக்கேல் லியூ கூறுகையில், " விண்வெளியில் இது போன்று நட்சத்திரங்களின்றி தனித்து மிதக்கும் கோள் எதையும் இதுவரை நாங்கள் கண்டதில்லை. இந்தக் கிரகம் எந்த நட்சத்திரத்தையும் சுற்றி வரவில்லை " என்றார்.
-- பி.டி.இ. சர்வதேசம் GLOBE ஜாமூன்.
-- ' தி இந்து 'நாளிதழ் வெள்ளி,. அக்டோபர் 11, 2013.

No comments:
Post a Comment