"எத்தனுக்கு எத்தன் எப்படி யோசிப்பான்>"
"அந்தக் கால பிரிட்டனில் யாராவது இறந்தால் உறவினர்களும் நண்பர்களும் சவப்பெட்டியில் ( மொய்க் காசு போல ) கரன்சி நோட்டுகளைப் போட்டு மூடிப் புதைப்பார்கள். அப்படி ஒரு சாவில், 'எல்லோரும் காசு போடுங்கள். கடைசியாக நீங்கள் எல்லாம் போட்ட அளவுக்கு நான் என் பங்குக்குக் காசை போடுகிறேன்' என்றான் ஒருவன். அனைத்து உறவினர்களும் போட்டதில் மொத்தமாக 1,000 பவுண்டு தேறியது. அந்த 1,000 பவுண்டு கரன்சிகளையும் எடுத்துக்கொண்டு, 'என் பங்காக 1,000 பவுண்டாக மொத்தம் 2,000 பவுண்டுகளை நான் போடுகிறேன்' என்று சொல்லி ஒரு செக்கில் '2,000 பவுண்டு' என்று எழுதி அதை சவப்பெட்டியில் போட்டு மூடிவிட்டான் இவன். எத்தனுக்கு எத்தன் இப்படித்தான் யோசிப்பான்!"
-- ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
"வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன வித்தியாசம்?"
"எங்கோ படித்தது,
கடமையைச் செய்தால் வெற்றி...
கட்ட்ட்ட்டமைக்குச் செய்தால் தோல்வி!"
-- கா.முத்துச்சாமி, தொண்டி. ( நானே கேள்வி... நானே பதில் ! ) தொடரில்.
-- ஆனந்த விகடன். 29-1-2014.

No comments:
Post a Comment