ARTIST -- ARTISTE. எம்.எஃப்.ஹூசேன், சின்னக்குயில் சித்ரா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான். ஆம் ஓவியரை மட்டுமல்ல பிற கலைஞர்களையும் ஆர்டிஸ்ட் என்றுதான் ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம்.
அப்படியானால் பின்வருமாறு குறிப்பிடலாமா?
"M.S.Hussain, A.R.Rahman and Chinna are popular artists". இல்லை இது தப்பு. Hussin artist மற்ற இருவரும் artistes
( அதிகப்படியாக ஒரு "E"உட்கார்ந்து இருப்பதைக் கவனித்தீர்களா? ) அதாவது ஓவியரை artist என்று குறிப்பிடுகிறோம். ராஜா ரவிவர்மா, பிக்காசோ, எம்.எஃப்.ஹுசேன் எல்லோரும் artists.
பாடகர், நடனக் கலைஞர் போன்ற perforrmers-ஐ artists என்று குறிப்பிடுவதுதான் வழக்கம்.
பிரெஞ்சு மொழியில் artist என்பதையே artiste என்றுதான் எழுதுவார்கள். அது வேறு விஷயம்.
சொல்லும்போதுகூட இந்த இரண்டு வார்த்தைகளையும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உச்சரிக்க வேண்டும். artist என்பதை ar-tist இரண்டு பகுதிகளையும் சமமான அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும். artiste என்று சொல்லும்போது "Teast" என்ற இரண்டாம் பகுதியை அதிக அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.
எம்.எஸ்.சுப்லட்சுமி - artiste, வான்கோ - artist. சூர்யாவின் அப்பா சிவகுமார் எப்படி? "E" உள்ள ஆர்டிஸ்டா அல்லது "E"இல்லாத ஆர்டிஸ்டா? அவர் ஓவியர், நடிகர் ஆகிய இரண்டும் என்பதால் இரண்டும்தான்.
இன்னொன்றையும் கூற வேண்டும். இப்போதெல்லாம் சிலர் நடைமுறையில் artiste என்று நான் சொன்னவகையைச் சேர்ந்தவர்களைக்கூட artist என்றே குறிப்பிடுகிறார்கள். Kerosene Oil என்று கூவி விற்றுக்கொண்டு போனால் புரியாது. கிருஷ்ணாயில் என்று சொன்னால்தான் சுலபமாகப் புரியுமல்லவா அந்த மாதிரி ஆகிவிட்டது.
-- ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,. வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 14 , 2014.

No comments:
Post a Comment