"நேர மேலாண்மைக்கு ஓர் உதாரணம் சொல்லுங்களேன்?"
"பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த், தனக்கு மிகவும் உடல் நலமில்லாத நாளிலும் கதை எழுதிக்கொண்டு இருந்தாராம். அவர் மனைவி, 'ஏன் உடல் நலமில்லாத நிலையிலும் இப்படி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்? நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு உடலுக்குத் தேவையான சிகிச்சை செய்து நன்றாக உறங்கி , சாப்பிட்டு பிறகு எழுத்து வேலைகளைக் கவனிக்க வேண்டியதுதானே...' என்று கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம்சந்த், 'ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலமும் அது ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கு தானாகவே அணைந்துவிடும்!' என்று மட்டும் பதில் சொல்லியிருக்கிறார். நேரத்தின் மேலாண்மையை இதற்கு மேல் உனர்த்த வேண்டுமா என்ன?"
--ஹெச்.பாஷா, சென்னை-106. ( நானே கேள்வி... நானே பதில்! ).
-- ஆனந்த விகடன். 9-10-2013.

No comments:
Post a Comment