Saturday, April 9, 2016

லிங்க வடிவில் மும்மூர்த்திகள் !

 மகாராஷ்டிரா பிரம்மகிரிமலை அடிவாரத்தில் உள்ள கோதாவரி நதிக் கரையில் த்ரியம்பகேஸ்வரர் ஆலயம் உள்ளது.  இங்கு ஈசன், பிரம்மா, திருமால் மூவரும் ஒரே பீடத்தில் லிங்க வடிவில் அருள்கிறார்கள்.  தங்கக் கவசத்துடன் கூடிய பெரிய ராஜகோபுரமும், சூலாயுதமும் உள்ளது.  கருவறை முன் உள்ள அரைவட்ட வடிவ மண்டபத்தின் நாற்புறங்களிலும் நுழை வாயில்கள் உள்ளன.  மேற்குப் புற வாயிலில் நுழைந்து சுவாமியை தரிசிக்கலாம்.  லிங்கங்கள் இருக்கும் பீடத்தில் இருந்து புனித நீர் ஊற்றாகப் பெருகுகிறது.  பிரம்மகிரி மலையில் கோதாவரி உற்பத்தி ஆகும் இடத்தில் கௌதம மகரிஷியின் குகை உள்ளது.  மேலும் இங்கு 1,000 லிங்க மூர்த்திகளைக் காணலாம்.
கண் திறந்த பெருமால்!
     கும்பகோணம் - ஆலங்குடி செல்லும் வழியில் உள்ள பாடகசேரி என்ற ஊரில், கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் உள்ளது.  இக்கோயிலில் மூலவர் பெருமாள் நின்றகோலத்தில் தனது இரு விழிகளைத் திறந்து பக்தர்களின்மீது தனது பார்வையை படரவிட்டு அருள் பாலிப்பதுபோல அமைந்திருக்கிறார்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர் 1- 14,  2013. 

No comments: