ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும்போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். "கடமையில் கருத்தாக இருப்பான். ஆனால் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவதுதான் இவனது பலஹீனம்".
அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்து விட்டு, "பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம். எடுத்ததெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?" என்று கேட்டார். அவனோ, "எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன். இப்போதுகூட ஒரு பந்தயம். உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன். பந்தயம் நூறு ரூபாய்" என்றான்.
"எனக்கு முதுகில் மச்சமே கிடையாது. நீ தோற்று விட்டாய். நீயே பார்" என்று கூறிய அவர் தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.
மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.
புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். "அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன். இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்." என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.
உடன் பதில் வந்தது. "நீங்கள் தான் தோற்றுப்போய் விட்டீர்கள். புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐனூறு ரூபாய் பந்தயன் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான். வெற்றி அவனுக்குத்தான்".
-- எஸ்.சித்ரா. ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஏப்ரல் 18, 2014.

No comments:
Post a Comment