உலகின் காஸ்ட்லி திருமணத்தை மற்றொரு முறை நடத்தியிருக்கிறார்கள் லட்சுமி மிட்டல் குடும்பத்தினர். லட்சுமி மிட்டலின் மகள் வனிஷாவுக்கு ஏறக்குறைய 46 மில்லியன் யூரோ செலவில் 2004-ல் திருமணம் நடத்திய லட்சுமி மிட்டல், இப்போது அவரின் தம்பி பிரமோத் மிட்டலின் மகள் ஸ்ரீஷ்டி மிட்டலின் திருமணத்தை 60 மில்லியன் யூரோ செலவில் நடத்தியிருக்கிறார். இது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 503 கோடி ரூபாய். உலக வரலாற்றில் டாப் 5-ல் இந்த இரண்டு திருமனங்களும் இடம் பிடித்திருக்கின்றன. - எவ்வளவு குழந்தைகளைப் படிக்க வெச்சிருக்கலாம்!
11.12.13.-ல் திருமணம்
அதிர்ஷ்ட தேதியில் திருமணம் செய்து கொள்ள வெளிநாட்டு ஜோடிகள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். ஆச்சர்யமாக, கடந்த 11.12.13 தேதிக்கு டெல்லிவாழ் மக்களிடையே அவ்வளவு ஆர்வம். ஆளாளூக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம் என்று இறங்க, டிராஃபிக்கில் சிக்கித் திணறிப்போனது டெல்லி. அன்று ஒரு நாள் மட்டும் டெல்லியில் நடந்த திருமணங்கள் சில ஆயிரங்களைத் தாண்டுமாம். - 'ஆ...ஊ'னா கூட்டமா தலியைத் தூக்கிட்டு வந்திடுறாங்க!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 25-12-2013.

No comments:
Post a Comment