Sunday, April 17, 2016

இசைத்தூண்கள்!

 திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மண்டபத்தில் பிரம்மாண்டமான இரு தூண்கள் காணப்படுகின்றன.  ஒவ்வொரு தூணிலும் நடுவே பெரிய தூண் ஒன்றும், அதைச் சுற்றி 18 சிறிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றைத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு ஒலி எழுகிறது.
வித்தியாசமான மூர்த்தம்!
     திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் விசேஷமானது.  இதில் அம்பிகை இடக்கையால் சிறிய
நந்தியைப் பற்றிக் கொண்டு இருப்பது போன்று உள்ளது.
தலையைத் திருகினால் !
      திருவண்ணாமலையை வலம் வருகையில் வழியில் ஓர் அதிசய விநாயகர் காணப்படுகிறார்.  அவரது தலையைத் திருகி தனியே எடுத்தால் உள்ளே கையளவு பள்ளம் காணப்படுகிறது.  இப்பள்ளத்தில் காசுகளைப் போட்டு மீண்டும் எடுத்துக் கொண்டால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை!  காசை எடுத்துக் கொண்டதும் தலையைப் பழையபடி சரியாக பொருத்திவிட வேண்டும்.
மூன்று வகை பிரார்த்தனை!
     ஆண்டவனைப் பிரார்த்திக்கும் முறையை வாசிகம்,உபாம்சு, மானஸம் என மூன்று விதமாகக் குறிப்பிடுகிறார்கள்.
வாசிகம் : பிறர் காதில் விழும்படி ஜபிப்பது.  இதற்கு ஒரு மடங்கு பலன்.
உபாம்சு : தன் காதில் மட்டும் விழும்படி பிரார்திப்பது.  இதற்கு  நூறு மடங்கு பலன் உண்டு.
மானஸம் : மனதிற்குள் தியானிப்பது.  வெளியில் கேட்காமல், கண்களை மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி மனதுக்குள் பிரார்த்திப்பதால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டுமாம்.
--- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஏப்ரல் 16 - 30.  2014.  

No comments: