Saturday, April 30, 2016

'நீர்'

  'நீரின்றி அமையாது உலகு'.  நம் உடலும் அப்படித்தான்.  உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான  பொருள் நீர்.  அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம்.  இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கற்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று!
    'கலங்கியதோர் தண்ணீர்தான்
    குடித்த பேர்க்கும்
    வாட்டமாய் வரம்பு
    தப்பித் திரிந்த் பேர்க்கும்
    வந்து சேரும் கல்லடைப்பு'  என்று பாடிய யூகி முனிவரும் சரி, 'நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்' என ஹிப்போகிரட்டீஸ் செய்த சபதத்திலும் சரி,  சிறுநீரகக்கல் அடைப்புக்கு மேற்கொண்ட வைத்தியமே ஒசாமா பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அமெரிக்கா கண்டறிய உதவிய சமீபத்திய சம்பவமும் சரி... பெருங்காலமாக அந்தச் சிறு கல்லை மனிதன் சுமந்து வந்திருக்கிறான் என்பதைப் பறைசாற்றுகின்றன!
-- மருத்துவர் கு.சிவராமன்.  ( ஆறாம் திணை  தொடரில் ).
-- ஆனந்த விகடன் . 9-10-2013. 

No comments: