முதலீடா தூக்குத் தண்டனையா.
கேப்பிடல் ( capital ) என்றால் என்ன அர்த்தம்? தலைநகர் என்ற அர்த்தம் capital க்கு உண்டு. இந்தியாவுக்கு புது டெல்லி capital , அமெரிக்காவுக்கு வாஷிங்டன் டி.சி. capital, ஜெர்மனிக்கு பெர்லின் capital என்று அடுக்குகிறீர்களா? "ஒவ்வொரு ஆங்கில வாக்கியத்திலும் முதல் எழுத்து பெரிய அதாவது capital லெட்டரில்தான் இருக்கவேண்டும்" என்கிறீர்களா? மறுக்க முடியாது. தொழிலில் செய்யப்படும் முதலீடும் capital தான்.
capital பனிஷ்மென்ட் என்பது குறித விவாதம் இப்போது அதிகமாக நடைபெற்று வருகிறது - அதாவது தூக்குத்தண்டனை. எதற்காகத் தூக்குத்தண்டனைக்கு capital Punishment என்று பெயர்? capital Letter என்பதுபோல் இந்தத் தண்டனையும் 'பெரியதாக' இருப்பதாலா? அல்ல. ஆங்கிலத்தின் பல வார்த்தைகள் லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றிலிருந்து வந்தவை. லத்தீன் மொழியில் 'capital' என்ற வார்த்தைக்கு 'தலை தொடர்பான' என்று பொருள். இப்போது புரிந்திருக்குமே ஏன் capital punishment என்ற பெயர் என்று.
capital என்பதை வேறொரு விதத்திலும் பயன்படுத்தலாம். "இந்த கார் எப்படி இருக்கிறது?" என்ற கேள்விக்கு"capital" என்று பதிலளித்தால், அந்தக் கார் முதல்தரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
கிட்டத்தட்ட இதே எழுத்துக்கள் கொண்ட இன்னொரு வார்த்தை Capitol. அரசுக் கட்டடங்களை இப்படிக் குறிப்பிடுவார்கள். அதுவும் நாடாளுமன்றம் போன்றவைகளை.
Divers -- Diverse -- Divorce
உயரத்தில் உள்ள ஸ்பிரிங் பலகையிலிருந்து நீச்சல் குளத்தில் குட்டிக் கரணம் அடித்து விழுவார்கள். Diving செய்யும் இவர்களை Divers என்று கூறலாம். இவர்களுடன் ஒரு 'E' ஒட்டிக்கொண்டால், Diverse. அப்படியென்றால் விவாகரத்து என்று சொல்லிவிடக் கூடாது. அது Divorce ( விவாகரத்தை அனுமதிக்காத நாடுகள் பிலிப்பைன்ஸ் மற்றும் வாடிகன்). அப்படியென்றால் Diverse என்றால் 'பல விதமான' என்று அர்த்தம். This is a country of diverce cultures என்பதுபோல. எனக்குத் தெரிந்த ஒருவரிடம் இது பற்றிப் பேசியபோது, "திசைதிருப்புவது என்கிற அர்த்ததிலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்களே" என்றார். அடடா, அது Divert.
-- ஜி.எஸ். சுப்ரமணியன்.( aruncharanya@gmail.com ). வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 21, 2014.

No comments:
Post a Comment