Sunday, April 10, 2016

முதலில் எது?


     ராமாயண காலத்தில் அனுமனும், ராமனும் ஒரே இலையில் சாப்பிட அமர்ந்தார்கள்.  ராமன் பக்கம் முதலில் சாதம் பரிமாறப்பட்டதால், வடகலையினரின்றும் முதலில் சாதமே பரிமாறுவார்கள்.  அனுமன் பக்கம் முதலில் காய்கறிகள் பரிமாறப்பட்டதால், தெங்கலை மக்கள் முதலில் காய்கறிகலைத்தான் வைப்பார்கள்.
கருடன் விலகி இருக்கும் தலம் !
     சில தலங்களில் சில காரணங்களுக்காக நந்தி விலகியிருப்பது உண்டு.  கருடன் விலகி இருக்கும் தலம் ஒன்றும் உண்டு.  தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேறை என்னும் பெருமாள் கோயிலில் சந்நதிக்கு இடது ஓரமாக கருடன் விலகி நிற்கிறார்.  நம்மாழ்வார் பாசுரம் பாட , அதைப் பெருமாள் கேட்பதற்காக கருடாழ்வார் விலகி வடக்கு பக்கமாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்திரன் வழிபட்ட தலம் !
     மதுராந்தகம் அருகேயுள்ள கிணார் தலத்தில் இந்திரன் வழிபட்டதை உறுதிப்படுத்திடும் வகையில் மூலவருக்கும் நந்திக்கும் இடையே ஐராவதத்தின்மீது அமர்ந்த நிலையில் இந்திரன் காட்சியளிக்கிறார்.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர் 1- 14,  2013.                                           

No comments: