கிழக்குத் திசையில் தீபமேற்றி வழிபட துனபம் நீங்கி இல்லத்தில் சர்வமங்களமும் உண்டாகும். மேற்குத் திசையில் தீபமேற்றி பூஜிக்க சனி, பீடை, கடன் தொல்லைகள், பங்காளிப்பகை, கிரகதோஷம் ஆகியவை அகலும். வடக்குத் திசையில் தீபமேற்றி வழிபட திரண்ட செல்வமும், மங்களமும் உண்டாகும். த்ற்குத் திசையில் தீபமேற்றுவதால் சுமாரான பலனே உண்டாகும். எனவே தெற்குத் திசையில் தீபம் ஏற்றாமல் இருப்பதே நல்லது.
முருகன் பாதத்தில் அசுரன் !
திருவானைக்காவலில் முருகப் பெருமான் ஆங்கார கோலத்தில் காட்சியளிகிறார். காமனை ஓர் அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ வடிவமாகும்.
அர்த்தமுள்ள படிகள் !
திருவீழிமழலை கோயிலில் மகா மண்டபத்திற்குச் செல்பவர்களுக்கு வாரத்தை நினைவுபடுத்த கிழக்குப் புறமிருந்து 7 படிகளும், மாதத்தை நினைவுபடுத்த தென்புறமிருந்து 12 படிகளும், நவக்கிரகங்களை நினைவுபடுத்த வடபுறமிருந்து 9 படிகளும் உள்ளன.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். டிசம்பர் 1- 14, 2013.
No comments:
Post a Comment