1,000 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையையும் மீட்கலாம்!
ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற மதுரையைச் சேர்ந்த எம்.மணிகண்டனால் உருவாக்கப்பட்டுள்ள போர்வெல் ரோபோ கருவியின் செயல்பாடு குறித்து அவரே விளக்குகிறார்.
ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட இக்கருவியின் உதவியால் மீட்க முடியும்.
'12 வி' பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களிலும்பேட்டரி மூலம் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் இக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள 'பிரஸ்ஸர் சேஞ்' அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. யில் இந்த இயந்திரத்திற்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஏப்ரல் 15, 2014.

No comments:
Post a Comment