Sunday, April 24, 2016

புதிய கிரகம்.

பூமியைப் போன்று இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு.
     பிரபல விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'கெப்ளர் பிளானெட்  ஃபைண்டிங் மிஷன்' எனும் முயற்சியின் கீழ் கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த கிரகத்திற்கு 'கெப்ளர் 186 எஃப்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
     இந்த புதிய கிரகமானது, 8,700 மைல் சுற்றளவைக் கொண்டுள்ளது.  அதாவது, பூமியவிட 10 சதவீதம் அகலமானது.
     இதனுடைய சுற்றுப்பாதை 'கோல்டிலாக்ஸ் சோன்' எனும் பகுதியில் அமைந்துள்ளது.  இந்த கிரகத்தில் உள்ள தட்பவெப்பம் மிகவும் சூடாகவும் இல்லாமல், மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லாமல், மிதமாக இருப்பதால் உயிர் வாழ ஏற்ற கிரகம் என்று சொல்லப்படுகிறது.
     பூமி தன் சுற்றுப்பாதையைச் சுற்றி முடிக்க 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது எனில், இந்த கிரகம் தன் சுற்றுப்பாதையைச் சுற்றி முடிக்க 130 நாட்களை எடுத்துக் கொள்கிறது.  இந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் சிவப்புக் குள்ள நட்சத்திரங்கள் ஆகும்.  தன் நட்சத்திரங்களிடமிருந்தான் இந்த கிரகம் ஒளியைப் பெறுகிறது.  இந்த ஒளியைக் கொண்டு பூமியில் உள்ள பல செடிகள் வாழ முடியும் என்று கூறப்படுகிறது.
     விண்வெளி விஞ்ஞானிகளால் இந்த கிரகத்தின் உண்மையான வயதைக் கணிக்க முடியாவிட்டாலும் பல கோடி ஆண்டுகளாக இது பிரபஞ்சத்தில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
-- நியூயார்க் டைம்ஸ்.  ரிலாக்ஸ்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 19, 2014.  

No comments: