1. தக்கல் முறையில் ரயிலில்முன்பதிவு செய்தால் -- முதல் வகுப்பில் செல்வது, முதியோருக்கான கட்டணச் சலுகையை
அனுபவிப்பது, பள்ளி மாணவர்களுக்கான கட்டணச் சலுகையை அனுபவிப்பது ஆகிய மூன்றும் சாதியமில்லாதது. பயணம்
செல்வதற்கு அதிகபட்சம் ஒரு நாள் முன்னதாகச் செய்யப்படும் தக்கல் முறை முன்பதிவில் முதல் வகுபிலும் செல்ல
முடியாது,வேறு எந்தச் சலுகைகளையும் அனுபவிக்க முடியாது.
2. ஸ்விட்சர்லாந்தின் தேசிய மொழி -- ஜெர்மன் தான். ஸ்விஸ் என்பது ஒரு மொழி கிடையாது. ஸ்விட்சர்லாந்தைப்
பொறுத்தவரை நான்கு தேசிய மொழிகள் உண்டு. அவை ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலியன், ரோமான்ஷ் ஆகியவை.
3. "சஷ்டியை நோக்க சரவண பவனார்" என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் -- இயற்றப்பட்டது ஈரோட்டின் அருகிலுள்ள
சென்னிமலையில். இதை எழுதியவர் தேவராய சுவாமிகள். இவர் தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்.
4. ஆக்ரா கோட்டை ஜலாலுதின் முகம்மதுவால் எழுப்பியது. திகைக்க வேண்டாம். அதுதான் அக்பரின் அசல் பெயர்.
5. ஒடிஷாவில் தோன்றிய ஒடிஸியிலும், ஆந்திரத்தில் பிரபலமான குச்சிபுடி நடனத்திலும் சலங்கை அணிவார்கள். மணிப்புரி
நடனத்தில் சலங்கைகள் அணிவதில்லை.
6. ஸ்மார்ட் கார்டு என்பது சட்டைப் பைக்குள் வைக்கும்படியான ஒரு சிறிய பிளாஸ்டிக் அட்டை. இதில் ஒருங்கிணந்த
மின்னணுச் சுற்றுகள் ( integrated circuits ) இருக்கும். இதை அடையாள அட்டையாகவோ, தகவல்களைப் பதிவு செய்யும்
அட்டையாகவோ, இவற்றின் தொடர்பான செயல்பாடுகளுக்காகவோ பயன்படுத்தலாம். ஏ.டி.எம். அட்டை , கடன் அட்டை ,
செல்போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு மூன்றுமே ஸ்மார்ட் கார்டுகள்தான்.
7. நம் உடலை ரத்தம் முழுவதுமாக ஒரு முறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் 23 நொடிகள். தேசிய கீதத்தை உரிய
முறையில் பாட எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் 52 நொடிகள். ஒரு குயரில் 24 தாள்கள் இருக்கும்.
-- ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,. வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 14 , 2014.
No comments:
Post a Comment