Saturday, November 21, 2015

கரப்பான் பூச்சி

முகம் பளபளக்க கரப்பான் பூச்சியை தடவுங்கப்பா!
     என்ன, டைட்டிலை படிச்ச உடனே தலைசுத்துதா...?
     இது உண்மைதான்!
     சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது.  கரப்பான் பூச்சி என்றாலே முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில் சீனாவில் சிலர் கரப்பான் பூச்சி பண்ணை வைத்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர்.  சீனாவில் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டு புழுக்களை வறுத்து சாப்பிடுவது அறுசுவை உணவாக கருதப்படுகிறது.
     சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன.
     அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது.  இதற்கு முதலீடு மிக குறைவு.  61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம்.
     பண்னை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும்.  அதுவும் அமெரிக்க கரப்பான் பூச்சிகளை தான் வளர்க்கின்றனர்.  இவை நீளமாக, பெரியதாக, கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும்.  இதற்கு இறக்கைகள் உண்டு.  இவற்றை அழிப்பதும் எளிது என்கிறார் பூமிஸ்.  அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு வடகம் போல காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.  கரப்பான் பூச்சி பண்ணையில், பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது.  ஒருமுறை கோடிக்கணக்கில் கரப்பான் பூச்சிகள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்புதான் மக்களுக்கே தெரிய வந்தது.  இந்த பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதியிளிலிருந்து தொலைவில் வைக்கின்றனர்.  இப்போது சீன 'டிவி'க்களில் கரப்பான் பண்ணைகள் வளர்ப்பு முறை பற்றிய விளம்பரங்கள் பிரபலாமாக உள்ளன.
     சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக்கழகங்கள் கரப்ப்பான் பூச்சியை வைத்து பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.  அணு கதிர்வீச்சை கூட தாங்கும் சக்தி உடையது கரப்பான் பூச்சி.  இவை மூலம், எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
    'லீ ஷிவான்' என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து தன் வழுக்கை தலையில் தினமும் தேய்த்து கொண்டதால் முடி வளர்ந்ததாக கூறுகிறார்.
-- அதிமேதாவி அங்குராசு.
-- தினமலர். சிறுவர்மலர் ,சென்னை பதிப்பு.. பிப்ரவரி 14,2014. 

No comments: