Friday, November 20, 2015

செவ்வாய்க்கு மனித எந்திரம்

  ( சிறப்பு )
   அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனமான  நாசா, செவ்வாய்க்கிரகத்தில்  உயிரினங்கள்  வாழ்வதற்கான  சாத்தியக்கூறுகள்  இருக்கிறதா  என்ற  ஆராய்ச்சியில்  ஈடுபட்டு  வருகிறது.  இதற்காக  நாசா  அனுப்பிய  கியூரியாசிட்டி  ரோவர், செவ்வாயின்  மேற்பரப்பில்  ஆராய்ந்து  வருகிறது.  இதற்கிடையில், பேரிடர்  மீட்பு  பணிகளில்  மனிதர்களை  ஈடுபடுத்த  முடியாத  அசாதாரணமான  சூழ்நிலைகள்  ஏற்படும்போது, அதை  சமாளிப்பதற்காக  மனிதனைப்போன்ற  ரோபோவை  நாசா  உருவாக்கியது.
   6  அடி  உயரம்  131  கிலோ  எடையுள்ள  ஆர்-5  ரோபாட்டுகளை  நாசா  தாயாரித்தது.  அதற்கு 'வால்கிரி'  என்று  பெயரிட்டுள்ளது.  கிட்டத்தட்ட  மனிதனைப்  போலவே  சூழ்நிலைகளை  புரிந்து  செயல்படும் வகையில்  அதிநவீன  தொழில்நுட்பத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள  வால்கிரி  ரோபாட்டை  பேரிடர்  நிவாரணப்பணிகளில்  மட்டுமல்லாது  வேறுபல  பணிகளிலும்  ஈடுபடுத்துவது  குறித்து  ஆய்வு  செய்துவந்த  நாசா, செவ்வாய்  கிரகத்தில்  ரோவரால்  நெருங்கமுடியாத  உள்பகுதிகளை  ஆராய  வால்கிரியை  பயன்படுத்த  திட்டமிட்டுள்ளது.
   இது  தொடர்பாக  நாசா  வெளியிடுள்ள  அறிவிப்பில், 'செவ்வாய்  கிரகத்தை  ஆராய்வதற்காக  வால்கிரி  ரோபாட்டை  அனுப்ப  திட்டமிட்டுள்ளோம்.  முன்னதாக, கிரகங்களைப்  பற்றி  வால்கிரி  அறிந்து  கொள்வதற்காக, 2  வால்கிரி  ரோபாட்டுகளை  கல்லூரிக்கு  அனுப்ப  முடிவு  செய்துள்ளோம்.  ஒரு  ரோபாட்  மாசசூசெட்ஸ்  தொழில்நுட்ப  மையத்துக்கும், மற்றொரு  ரோபாட்  பாஸ்டனில்  உள்ள  வடகிழக்கு  பல்கலைக்கழகத்துக்கும்  அனுப்பப்படும்.  இந்த  2  பல்கலைகளும்  அதிநவீன  ராணுவ  திட்டங்கள்  ஆராய்ச்சி  முதனமையால்  தேர்வு  செய்யப்பட்டுள்ளன.  ரோபாட்டுகளுக்கு  பாடம்  கற்றுக்  கொடுப்பதற்காக  இந்த  2  நிறுவனங்களுக்கும்  ஆண்டுக்கு  2  லடசத்து  50  ஆயிரம்  டாலர் (ரூ. 1.65 கோடி ) வீதம்  2  ஆண்டுகளுக்கு  வழங்கப்படும்  என்று  குறிப்பிட்டுள்ளது.
-- தினமலர்  திருச்சி  20-11-2015. 

No comments: