காளான்களை கொண்டு சாக்கடையை சுத்தம் செய்யலாம். இதை பாட்டனி புத்தகத்தில் படித்ததோடு சரி. யாரும் முயற்சி செய்வதில்லை. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்கள். கழிவு நீர் நிறைந்த பகுதியில் சில காளான்களை நட்டு வைத்தார்கள். அடுத்த ஒரு வாரம் கழித்து அந்த நீரை சோதித்ததில் அந்த நீரின் நச்சுத்தன்மை கிட்டத்தட்ட பாதிக்கும் கீழாக குறைந்திருந்தது. சாக்கடை நீரின் தன்மை இப்படி மாறுவதற்கு காரணம், மைசிலியம் என்னும் காளான்களின் அடிப்பகுதி சாக்கடையில் உள்ள இ - கொலி பாக்டீரியா, பூச்சிகள் போன்றவற்றை அழித்துவிடுவதுதானாம்.
-- மணிகண்டன். நாளைய உலகம். ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி10,2014.
-- மணிகண்டன். நாளைய உலகம். ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி10,2014.
No comments:
Post a Comment