வீட்டுக்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது? கதவுதான். வீட்டு வாசல்கள் அழகாக இருப்பதில் கதவுகளுக்கும் முக்கிய இடம் உண்டு. அழகிய அம்சம் சார்ந்த வாசல் கதவுகள் தற்போது கண்ணாடி இழைகள் மற்றும் ரீஇன் டோர்ஸ்டு பிளாஸ்டிக்கிலும் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.
மரத்துக்கு மாற்றாக ஸ்டீல்களும்கூட இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறன. தற்போது ஸ்டீல் விலையும் அதிகமாகவே விற்பனையாகிறது. எனவே, விலை அதிகமாக உள்ள இந்தக் கதவுகளைவிட கண்ணாடி இழைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் கண்னாடி இழை கதவுகளைப் பயன்படுத்தலாம். இவற்றின் விலை குறைவு. மேலும் கண்ணைக்கவரும் வகையில் பல டிசைங்களிலும் கிடைக்கின்றன.
அசல் மரக்கதவுகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் செய்ய முடியும். மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளில் பராமரிப்பு அதிகம் தேவைப்படும். மழைக்காலங்களில் சில மரக் கதவுகளில் தண்ணீர் பட்டால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும். ஆனால், கண்னாடி இழை கதவுகளில் அந்தப் பிரச்சினை இல்லை. 100 சதவிகிதம் வாட்டர் ஃபுரூப்புடன் எல்லா சீதோஷ்ண நிலைகளையும் தாங்கக்கூடியவை.
குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளைப் பொருத்த முடியும். குறிப்பாகக் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அறைகள் மற்றும் குழந்தைகளின் குளியல் அறைகளுக்குக் குழந்தைகள் விரும்பும் வகையிலான டிசைங்களிலும், வண்ணங்களிலும் வடிவமைக்கலாம் என்கின்றனர் கட்டுநர்கள்.
-- மிதிலேஷ். சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 15,2014.

No comments:
Post a Comment