ஸ்ரீராமபிரான் சேது பந்தனம் ( பாலம்) கட்டுவதற்கு முன்பு விநாயகரையும், நவக்கிரகங்களையும் பூஜித்தார் என்பது புராணம். நவக்கிரகப் பிரதிஷ்டை நடந்த இடம் ' நவபாஷாணம்' எனப்படும். அது இப்போதுள்ள தேவிப்பட்டணம். விக்னேஷ்வரரை பூஜை பண்ணிய இடம் உப்பூர். எனவே, இந்தப் பிள்ளையாரை வழிபட்டே ராமேஸ்வர யாத்திரையை தொடங்க வேண்டும்.
மூன்று வகை ஆசைகள்
மூன்று வகையான ஆசைகள் மனிதனை மோட்சமடையாமல் தடுக்கின்றன என்பர். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன அவை. தனேஷனை, தாரேஷனை, புத்ரேஷனை என்பது வடநூல் வழக்கு. மண்ணாசை முதலில் வந்துவிடும். இளமையில் பெண்ணாசை வரும். பிறகு வருவது பொன்னாசை. இம்மூன்று ஆசைகளே பிறவிக்குக் காரணமாகும். இவற்றை விடவேண்டும் என்பதனை நாயன்மார் வரலாறு காட்டும். சேரமான் பெருமாள் தனேஷனையை விட்டவர். திருநீலகண்டர் தாரேஷனையை விட்டவர். புத்ரேஷனையை விட்டவர் சிறுத்தொண்டர்.
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014.

No comments:
Post a Comment