தேங்காய் என்பது தோல், நார், ஓடு எனும் மூன்றையும் விடுத்து உள்ளே இனிக்கும் பொருளாக உள்ளது. அது போன்று நம்மிடம் உள்ள ஆணவம் ( தான் எனும் அகந்தை ), கன்மம் ( முன்பிறவி பாவங்கள் ), மாயை ( இப்பிறவியில் செய்யும் தவறுகள் ) இவை மூன்றையும் நீக்கினால், நம் உள்ளே உயிரில் இறைவன் இனியவராகத் துணை புரிவார். இதைப் புரிந்து கொண்டு வாழ்வதற்காகவே, தேங்காய் உடைத்து வழிபட வகை செய்துள்ளார்கள்.
ஒரு வாழை மரம் வளர்ந்தால், அதைச்சுற்றி பல கன்றுகள் தோன்றி பலன் அளிக்கும். வாழைப்பழம் விதையானது வாழையடி வாழையாக தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். அதன் பழம் இறைவனுக்கு நிவேதனமாக ஆவது போன்று நம் குலமும் வாழையடி வாழையாக வம்சவிருத்தியடையவும், எல்லாம் ஆண்டு அனுபவித்து முதிர்ந்த வயதில் ( பழுத்த பழம் என்பார்கள் ) இம்சை இல்லாமல் இறைவனடி சேரவும் வாழைப்பழ நிவேதனம் அறிவுறுத்துகிறது. மேலும், வெற்றிலைப் பாக்கும் வைக்க வேண்டும். இது லட்சுமி கடாட்சத்தைத் தரும்.
-- அறிவோம்! தெளிவோம் ! - மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர்.பக்திமலர். பிப், 20, 2014.

No comments:
Post a Comment