முன்பு குளியல் அறைக்குக்கூட வழுக்கக்கூடிய டைல்ஸ்களையே பயன்படுத்தப்பட்டன. இப்போதோ அக்குபஞ்சர் மற்றும் கிரிப்பர் வகை டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான டைல்ஸ்களில் ஷாம்பு கொட்டியிருந்தால்கூடக் கால் வைத்தாலும் வழுக்காது.
வீட்டின் முகப்புப்பகுதியில் ஒரே வண்ணத்தில் டைல்ஸ் பதிக்கும் வழக்கமே முன்பு இருந்தது. தற்போது ஸ்டைலான, கலர்ஃபுல்லான டிசைகளில் டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர்டிகோ பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் போதும், நடக்கும் போதும் பிடிமானம் இருக்கும் வகையில் சொரசொரப்பான டெரகோட்டா வகை டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.
வீட்டின் உள் பகுதிக்கு மங்கலான நிறம் கொண்ட டைல்ஸ் பயன்படுத்தப்பட்ட காலம் மாறிப் பளிச்சிடும் வண்ணங்களில் டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன. சுமார் 1000 சதுர அடி பரப்பில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு 500 முதல் 600 டைல்ஸ்கள் தேவைப்படும். சமையல் கூடத்திற்குச் சிம்னி உயரம் வரை வால் டைல்ஸ் பதிக்க வேண்டும்.
வரவேற்பறை, சமையலறை, பூஜையறை, படுக்கையறை, படிக்கும் அறை என அனைத்துக்கும் தனித்தனி டைல்ஸ்கள் இன்று விற்பனைக்கு உள்ளன. ஆனால், டைல்ஸ்களில் சீதோஷ்ண நிலையின் தாக்கம் கணிசமாகத் தெரியும். கோடைகாலத்தில் உள் கூடங்களில் டைல்ஸ் சற்று சூடாகத் தெரிவதும், குளிர்காலத்தில் குளிர்ச்சியாகத் தெரிவதும் டைல்ஸ்களில் உள்ள ஒரு குறைபாடு.
மொட்டை மாடியில் பதிக்கவும் இன்று நிறைய டைல்ஸ்கள் சந்தைக்கு வந்துவிட்டன். இவற்றில் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்ளும் டைல்ஸ்களும் அடங்கும்.
-- மகேஷ். சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, பிப்ரவரி 22, 2014.

No comments:
Post a Comment