செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தடை. ஐக்கிய அரபு நாடுகள் 'பத்வா'.
நெதர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம், செவ்வாயில் குடியிருப்பை உருவாக்கி அங்கு மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றச் செய்யும் ஒருவழி பயணமான 'மார்ஸ் ஒன்' திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, முதற்கட்ட தேர்வும் முடிந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2024 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர், ஒரு வழி பயணமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு செல்வது இஸ்லாமுக்கு எதிரானது என ஐக்கிய அரபு நாடுகளின் இஸ்லாமிய விவகார மற்றும் அறக்கட்டளையின் பொது அதிகார குழு 'பத்வா' விடுத்துள்ளது.
இதுகுறித்து குழுவின் தலைவர் பரூக் அமதா கூறுகையில், 'செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழி பயணமாக செல்வது பாதுகாப்பு இல்லாதது. தற்கொலைக்கு சமமானது. ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது இஸ்லாமுக்கு எதிரானது. எனவே, மார்ஸ் ஒன் திட்டத்துக்கு பத்வா விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து 500 க்கும் அதிகமானோர், மார்ஸ் ஒன் திட்டத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-- தினமலர். 23-2-2014.

No comments:
Post a Comment