துபையில் உள்ளது உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் காலிபா.
828 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடம் 163 தளங்கள் கொண்டது. இதன் கட்டுமானப் பணி 2004, செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கியது. 2010-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி இக்கட்டிடம் திறக்கப்பட்டது.
இதன் மேல்தளத்தில் இருந்து நகரின் அழகை நன்கு ரசிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு மீண்டும் மீண்டும் வருவதாக இக்கட்டிடத்தை நிர்வகித்து வரும் எமார் பிராபர்ட்டீஸ் செயல் இயக்குநர் அகமது அல் பலாசி கூறுகிறார்.
இந்த கட்டிடத்தின் மேல் தளத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு 18.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர்.
இந்த கட்டிடத்தின் 4-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நகரின் சூரிய உதயத்தை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
-- பி.டி.ஐ. சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014.

No comments:
Post a Comment