திருமலை நாயக்கரின் கற்சிற்பங்கள் கண்டெடுப்பு. தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தகவல்.
தமிழகத்தில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்களில் சிறந்தவராக கருதப்படும் திருமலை நாயக்கரின் கற்சிற்பங்கள் மதுரை உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான கனமான கற்பலகைகளில் நாயக்கர் கால கலைநுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் சுமார் 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிற்பத்தில் உயர்ரக வகையைச் சேர்ந்த கம்பீரமான தோற்றத்தையுடைய ஆண் குதிரையின்மீதுஅமர்ந்துள்ள மன்னர் குதிரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போல கீழே நிற்கும் பணியாள் மன்னருக்கு உதவுவது போன்றும் காட்டப்பட்டுள்ளன. அருகில் பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பது போலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன.
அடுத்த சிற்பத்தில் மன்னர் நடந்து செல்வது போலவும், வில்லில் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போன்றும் உள்ளது.
திருமலை நாயக்கரை குதிரை வீரராகவும், வேட்டையாடும் காட்சியையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
_தினமலர். 10-4-2014.

No comments:
Post a Comment