உஷ்ணம் குறைக்கும் டைல்ஸ் !
கட்டுமானத்துறையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதியப் பொருட்கள் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் வீட்டில் உஷ்ணத்தைக் குறைக்கவும் நவீன தொழில் நுட்பம் வந்துள்ளது. உஷ்ணத்தை உள்ளீழுத்துக் கொள்ளும் டைல்ஸ்களை மாடியின் மேற்புரத்தில் பதிப்பதன் மூலம் உஷ்ணத்தைக் குறைக்க வழி கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த வகை டைல்ஸ்கள் இப்போது இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டும், உஷ்ணத்தை குறைக்கும் மூலப்பொருட்களின் கலவையைக் கொண்டும் உயர் அழுத்த முறையில் டைல்ஸ்களை பல நிறுவனங்கள் இன்று உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த வகையான டைல்ஸ்கள் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன் கட்டடத்தின் உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதுபோன்ற டைல்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்கள், மின் விசிறிக்கான மின் தேவை குறையும். மேலும் இந்த டைல்ஸ் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காங்கிரீட் சேதமடையாமலும் காக்கப்படுகிறது.
"உஷ்ணத்தைத் தடுக்கும் இந்த வகையான டைல்ஸ்களை மாடியின் மேல்புரத்தில் ஒட்டினால், கீழ் தளத்தில் உள்ள வீட்டுக்கு கிடைக்கும் குளிர்ச்சி, மாடி வீட்டுக்கும் கிடைக்கும்" என்கிறார் உஷ்ணம் குறைக்கும் டைல்ஸ்களை உற்பத்தி செய்துவரும் பிரேம் ஆந்த்.
-- டி.கார்த்திக். சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, அக்டோபர்19, 2013.
No comments:
Post a Comment