உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிளி தன் காப்பாளரைக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்னால் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதேபோல பிரான்ஸில் தன் காப்பாளரைக் கொன்ற குற்றவாளியை அவரது நாய் அடையாளம் காட்டியுள்ளது. பாரீஸ் நகரத்தில் டாங்கோ என்னும் 9 வயதுடைய நாய் வசித்து வந்தது. டாங்கோவின் காப்பாளரை சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆனால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு இருந்தது. அதன் அடிப்படையில் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்யச் சொல்லியுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவரைப் பார்த்து அந்த நாய் கோபமாகக் குரைத்தது. அந்த நபர்தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்தனர்.
-- ஆர்.ஜெய்குமார். விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 12, 2014.
-- ஆர்.ஜெய்குமார். விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 12, 2014.
No comments:
Post a Comment