மதுரை மீனாட்சிக்குக் கோயில் கட்டியபோது, கிழக்குப் பகுதியில் ஆவணி மூல வீதியை அடுத்து ராஜகோபுரம் ஒன்று கட்டப்பட்டது. பணிகள் பாதி நடந்து கொண்டிருந்த வேளையில் ராஜகோபுரத்தில் இருந்த கற்களில் தேரை விழுந்துவிட்டதாம். அதற்கு மேல் பணியைத் தொடர்ந்தால் கோபுரம் தாங்காது எனச் சிற்பிகள் எச்சரித்ததால் உடனே அப்பணி நிறுத்தப்பட்டதாம். இக்கோபுரம் இப்போதும் பாதி கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி அளிக்கிறது.
பத்து வகை உற்சவம் !
ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்கள் பத்து வகைப்படும். அவை : 1நாள் உற்சவம் -- சைவம்; 2 நாள் உற்சவம் -- கௌணம்; 5 நாள் உற்சவம் -- பௌதிகம்; 7 நாள் உற்சவம் -- கௌவனம் ஸ்ரீகாரம்; 9 நாள் உற்சவம் -- தைவீகம் சௌக்யம்; 11 நாள் உற்சவம் -- மைத்ருகம்; 13 நாள் உற்சவம் -- கௌமாரம்; 15 நாள் உற்சவம் -- காத்தூகம்; 18 நாள் உற்சவம் -- சாந்திரம்; 48 நாள் உற்சவம் -- மண்டலம்.
மணியோசை !
மைசூருக்கு அருகில் சோமநாதபுரத்தில் அமைந்துள்ள கேசவன் கோயில் கி.பி.1208-ல் மூன்றாம்னரசிம்ம ஹொய்சாள மன்னரால் கட்டப்பட்டது. இங்கு கிருஷ்ணரின் சிலையில் உள்ள புல்லாங்குழலில் எங்கு தட்டினாலும் இனிய மணியோசை கேட்கிறது. இத்தனைக்கும் சிலை வடிக்க கையாண்ட அதே வகை கனமான கருங்கல்லே புல்லாங்குழல் வடிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
--- குமுதம் பக்தி ஸ்பெஷல். மார்ச் 15 - 31, 2014.

No comments:
Post a Comment