நம் நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் 8 கோடியே 60 லட்சம் பேர். இது மொத்த மக்கள்தொகையான 121 கோடியில் 7.1 சதவிகிதம் . 60 வயதைக் கடந்தவர்களை முதியவர்கள் என்று ஐ.நா. சபை வகைப்படுத்துவதால் இந்தக் கணக்கு. முத்யவர் யார் என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.
50 வயது முதலே முதுமை தொடங்குவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், முதுமை என்பதை வயதின் மூலம் அறிவதைவிட , வாழ்க்கையில் ஒருவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையிலும் அவரது செயல் தன்மையின் அடிப்படையிலும் புரிந்துகொள்ள வேண்டும். முதியவர்களின் உடலில் செல்களைப் புதுப்பிக்கும் திறன் குறைவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும்.
இன்னொரு பக்கம் பார்வை, கேட்புத் திறன் உள்ளிட்ட உனர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும். ஒவ்வொரு உணர்வு உறுப்புகளும் வெவ்வேறு காலத்தில் இதுபோல படிப்படியாக உணர்வுகளை இழக்கும். ஆனால், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதை வைத்தும் முதுமையை உணரலாம். முன்பு செய்த கடினமான வேலைகளைத் தவிர்த்து எளிமையான வேலைகளைச் செய்வது அல்லது மெதுவாக வேலைகளைச் செய்வது என்பதும் முதுமையின் இயல்பே. வயதாவதைப் பற்றிய அறிவியலுக்கு ஜெரான்டோலாஜி (Gerontology ) என்று பெயர். முதுமையில் வரும் நோய்களைப் பற்றிய படிப்புக்கு ஜெரியாட் ரிக்ஸ் ( Geriatrics ) என்று பெயர்.
--- பேராசிரியர்கள் இராம சீனுவாசன். வே.ராஜி சுகுமார். பூச்செண்டு.
--- 'தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஏப்ரல் 13,2014.

No comments:
Post a Comment