ராம நாமத்தை மந்திர அட்சரங்களாகப் பிரித்தால் ர, அ, ம என்ற மூன்று அட்சரங்களாகும். ர என்பது அக்னி பீஜம். அ என்பது சூர்ய பீஜம். ம என்பது சந்திர பீஜம். அக்னி பீஜம் பாவங்களைப் போக்கும், சூர்ய பீஜம் ஞானம் அளிக்கும், சந்திர பீஜம் மனத்துயர் போக்கும். மனத்துயரை நீக்கி பாவங்கள் போக்கி ஞானம் அளிப்பது ராம நாமம் என்பது இதன் உட்பொருள்.
பஞ்ச பிரம்ம தலங்கள் !
நடுவே மூலஸ்தானமும், நான்கு பக்கங்களிலும் நான்கு லிங்கங்களும் அமையப் பெற்ற திருத்தலம் பஞ்ச பிரம்ம ஸ்தலம் எனப்படும். அந்த அமைப்பு உள்ள திருப்புகலூர், திருவாரூர், மாகாளம் ஆகியன பஞ்ச பிரம்ம தலங்களாக விளங்குகின்றன.
யோக பீடங்கள் !
அகத்தியர் தவம் புரிந்த இடங்களுள் பாபநாசத்தினை யோக பீடம் என்றும், குற்றாலத்தை போக பீடமெனவும், சிவசைலத்தினை ஞான பீடமாகவும் சொல்வர். இம்மூன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்லன.
பிரதோஷ கணபதி !
காரைக்கால் அருகே உள்ள திருதெளிசேரி, பார்வதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிள்ளையார், பிரதோஷ விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். திங்கட் கிழமைகளில் மாலைவேளையில் இவரை வணங்குவது சிறப்பான பலன் தரும்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஏப்ரல் 1 - 15, 2014.

No comments:
Post a Comment