அந்த நடிகர் வசீகரமானவர். பட்டப் படிப்பும் நல்ல சினிமா கம்பெனி வேலையும் இருந்தது. கதாநாயக வேடத்திற்கு தேடிக்கொண்டிருக்கையில் ஒரு வாய்ப்பு வந்தது. போய்ப் பார்க்கிறார்.
"இதில் இரண்டு கெட்டப்கள். ஒன்று ராஜகுமாரன். இன்னொன்று நோய் பிடித்த வயோதிகன் ( சாபத்தின் விளைவு ). ராஜகுமாரன் வேஷம் சரிதான். ஆனால், அந்த நோய்வாய்ப்பட்ட வயோதிகன் வேடம் உங்களுக்கு பொருந்தாதே !" என்று திருப்பி அனுப்பிவிட்டார் இயக்குநர்.
மனம் தளரவில்லை. அடுத்த நாள் காலை இயக்குநர் வீட்டில் ஒரு நோய்வாய்ப்பட்ட வயோதிகர் காத்திருந்தார். கருணையுடன் என்ன வேண்டும் என்று கேட்க, "ஹீரோ சான்ஸ்" என்று வேஷம் கலைத்து தன் வேஷப் பொருத்தத்தை நிரூபித்தார் அந்த நடிகர். முதல் வாய்ப்பும் கிடைத்தது.
படம் : மணாளனே மங்கையின் பாக்கியம்.
அந்த நடிகர் : ஜெமினி கணேசன்!
-- டாக்டர் ஆர். கார்த்திகேயன். தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 7, 2014.

No comments:
Post a Comment