'கொழுப்பைக் குறை' யாராவது சொன்னால் நமக்கு கோபம் வராமல் இருக்காது. ஆனால், ஒரு அரசாங்கமே இதைச் சொன்னால் ...? கொழுப்பைக் குறை எனஸ் சொல்லியிருப்பது இங்கிலாந்து அரசுதான். இங்கிலாந்தில் பீட்சாக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சீஸ், சாஸ் நிறுத்த வேண்டும் என்றும் அதற்குத் தனியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 'கொழுப்புக் குறைபாடு' நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குக் காரணம் பீட்சாவுக்கு இலவசமாக அளிக்கப்படும் சீஸூம் சாஸூம்தான் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. மக்கள் கேட்கும் போதெல்லாம் இவற்றை ஹோட்டல்காரர்கள் கூடுதலாக வழங்குகிறார்கள். எனினும் இதற்கு ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
-- ஆர்.ஜெய்குமார். விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 12, 2014.
-- ஆர்.ஜெய்குமார். விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 12, 2014.
No comments:
Post a Comment